தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடயே அரபிக்கடலில் உருகாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
7 மாவட்டங்களில் கன மழை
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கள், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிசர்கா புயல்
அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த ஆழ்ந்த கற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் புயலாக வலுப்பெருகிறது. இந்த புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுபெற்று நாளை பிற்பகல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மகராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரைஷ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக்(ராய்பூர்)அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக மன்னர் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைப் பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கரூர் மவட்டத்தின் பரமத்தியிலும் கன்னியாகுமரியின் குழித்துறையிலும் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளன.
Share your comments