தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாள்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஒரு மாத காலமாக மழையினால் தவித்து வந்த சூழ்நிலையில், சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஐந்து நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்பு இருப்பதாக வந்த தகவல், அச்சம் அளிக்கிறது.
கிழக்கு திசை காற்றின் வேகம், மாறுபாடு காரணத்தினால்,
இன்று டிசம்பர்-29 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலைவும், என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிசம்பர்-30இல் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்றும் சில மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்பது குறிப்பிடதக்கது.
டிசம்பர்-31 மற்றும் 01 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் டிசம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில், சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவலில் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
Share your comments