உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பதால் தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளதாக ஒரு ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
ஆய்வில் தகவல் (Information in the study)
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடியில் அனல் மின் நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பதால் தமிழகத்தில் மின் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மானியம் அதிகரிக்க வாய்ப்பு (Opportunity to increase the grant)
உடன்குடி ஸ்டேஜ் 1 & ஸ்டேஜ் 2 மின் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசின் கடன் மேலும் 20,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். இதன் மூலம் நுகர்வோருக்கான மின் கட்டணம் உயரக்கூடும். அல்லது மாநில அரசு மின் வாரியத்திற்கு அளிக்கும் மானியங்களை அதிகரிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
இதனிடையே, உப்பூரில் புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 1600 (2 × 800) மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத் திட்டம் சட்டரீதியாக பல தடைகளை எதிர்கொண்டிருப்பதால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அத்திட்டத்தை உடன்குடிக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
அனல்மின் நிலையங்கள் (Thermal power stations)
ஏற்கெனவே உடன்குடியில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலையங்களை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இவ்விரண்டுமே 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்மொழியப்பட்ட திட்டங்கள்தான். மாநிலத்திற்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில் உடன்குடி அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்திற்கான செலவு மிக அதிகமாகும்.
இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையின் இணை எழுத்தாளரும் க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பின் மூத்த ஆய்வாளருமான ஆஷிஷ் பெர்ணாண்டஸ் கூறியதாவது:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பொருளாதாரம் வியக்கத்தக்க முறையில் மாறியுள்ளது. நிலக்கரி அனல்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 6.7 முதல் ரூ. 8.2 வரை செலவாகிறது. ஒப்பீட்டுப் பார்த்தால் மின்கல சேமிப்பகத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தற்போது யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய்க்கும், தனித்த பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் 3 ரூபாய்க்கும் குறைவாகக் கிடைக்கிறது.
சேமிக்க வாய்ப்பு (Opportunity to save)
இந்த விலையானது 2025ஆம் ஆண்டில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு பத்தாண்டுகளின் இறுதிக்குள் உருவாகும் கூடுதல் மின் தேவையை மின்கலத்துடன் கூடிய பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற்றால் 2024 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.20,000 கோடியை மாநில அரசு சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை!
கடற்கரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு!
Share your comments