1. செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது: தமிழகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

KJ Staff
KJ Staff

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் - 4 தேர்வுக்கான அறிவுப்பு கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. அதாவது தமிழகத்தில் காலியாக உள்ள 6,491( இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ) பணியிடங்களை  நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி  குரூப்-4 தேர்வைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வு என்பது கிடையாது.எனவே  எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது மிக அவசியமாகும். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சியினை வழங்க உள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான இலவச அறிமுக வகுப்பு வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்குள்ளாக நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். தொலைபேசி எண்கள் 044-26430029 மற்றும் 8668038347 மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதே போன்று திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த படவுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் உடனடியாக மாவட்ட மைய நூலகத்தை  நேரிலோ அல்லது 04175221419 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என  மாவட்ட நூலகம் தெரிவித்துள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Tamil Nadu Public Service Group - 4: Free Coaching Classes Held At Chennai And Thiruvannamalai, Get To Utilize The Opportunity Published on: 17 June 2019, 10:51 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.