தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு (Tamil Nadu State Disaster Management Authority) சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
பொதுமக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால்.. கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், மழை காரணமாக இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மழை தொடர்பான விவரங்களை அறிய
Click here
மேலும் படிக்க...
Share your comments