தமிழகதில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கல்லுரிகளில் காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப் படும் எனவும் தற்போது காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது காலியாக உள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம்,கணினி அறிவியல், உயிரி வேதியல், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 24 ஆம் தேதி ஆகும்.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் (55%) பெற்றிருக்க வேண்டும், மற்றும் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அல்லது அதே பாடப்பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 5% சலுகை உண்டு.
தொலைதூர அல்லது பகுதி நேர படிப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ள படமாட்டாது. பணி அனுபவம், கல்வி சான்றிதழ் என அனைத்தின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
முந்தைய கற்பித்தல் அனுபவம்
படிப்புத் தகுதி
நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் விவரம்
பொது பிரிவினருக்கு:ரூ.600
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு: ரூ.300
மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற இணைய முகவரியை பார்க்கவும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments