14.04.2019 தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு. உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் இந்நாளை மிக விஷேஷமாக கொண்டாடுவர்.இந்திய , மலேஷிய, சிங்கப்பூர், மேலும் தமிழர்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும் தங்கள் பண்பாட்டை மறக்காமல் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு நாளை மிக விசேஷமாக கொண்டாடுவர். புத்தாண்டிற்கு முதல் நாளே மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்க துவங்கிவிடுவார். புத்தாண்டன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து பூஜை செய்து கடவுளுக்கு பொங்கல், இனிப்பு, பலகாரம், படைத்தது வழிபடுவர்.
மேலும் மா,பலா, வாழை ஆகிய முக்கனிகள் மற்றும் வெற்றிலைபாக்கு, நெல், நகைகள் ஆகிய மங்களமான பொருட்களை வைத்து பூஜை செய்வர். இந்த நன் நாளில் மக்கள் தங்கள் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து இறை அருள் பெறுவர்.பின் பலகாரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்வர், உறவினர் வீட்டிற்கு செல்வர். வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று நன்மை பெறுவர் .
தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு இலையை நிரப்பும் வகையில் விதவிதமான உணவுகளை சமைத்து பரிமாறி உண்டு மகிழ்வர். இந்நாளில் குடும்பத்தை சார்ந்த அனைவரும் ஒன்றாக கூடி மகிழ்வர்.
மேலும் இந்த தமிழ் புத்தாண்டு மாதத்தில் பிரத்யேக விசேஷமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருமிதமான விஷேஷத்திருவிழா இம்மாத்தில் நடைபெறும்.இந்த மதுரை சித்திரை திருவிழாவை கண்டு இறை அருள் பெறுவதற்காக உலகெங்கிலிருந்தும் மக்கள் திரண்டு வருவார். தமிழ் மக்கள் அனைவரும் இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
Share your comments