விவசாய நிலங்களில் மலட்டுத் தன்மை ஏற்படுவதை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராஜேஷ்குமாருக்கு சீன அரசு (China) இந்திய மதிப்பில் 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.
வேதியுரங்களால் மலட்டுத்தன்மை:
விவசாயிகள், விவசாய நிலங்களில் வேதி உரங்களைப் (Chemical Fertilizer) பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறுபட்டு பாழாகி விடுகிறது. இதனால், பயிர்களின் வளர்ச்சி இயற்கையாகவே தடைபடுகிறது. பயிர்களின் வளர்ச்சிக்காக, வேதி உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், விவசாய நிலங்கள் பலவும் மலட்டுத்தன்மை (Infertility) அடைந்துள்ளது. விவசாய நிலங்களை மலட்டுத்தன்மையிலிருந்து மீட்டெடுக்க, இயற்கை விவசாயம் ஒன்றே தீர்வு. இதனை உணர்ந்த, தென்காசியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (Rajeshkumar), விவசாய நிலங்களில் ஏற்படும் மலட்டுத்தன்மையை தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
சீன அரசு நிதியுதவி:
தென்காசி மாவட்டம் மணலூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், சீனாவின் ஹாங்ஜோ (Hangzhou) நகரில் உள்ள ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் அணு விவசாய ஆராய்ச்சி பிரிவு (Nuclear Agricultural Research Division) ஆராய்ச்சியாளராக உள்ளார். இந்த நிலையில் விவசாய நிலங்களில் கழிவுகள் வினைமாற்றத்தை மண்ணிற்குள்ளேயே கட்டுப்படுத்தி, மலட்டுத் தன்மை ஏற்படாதவாறு தடுப்பது குறித்த இவரின் திட்ட அறிக்கையை அங்கீகரித்தது சீன அரசு. இவரின் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கத்தில், 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது சீனா. சீனாவின் இந்த நிதியுதவியால், தமிழரின் இந்த ஆராய்ச்சி விரைவில் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை. மண்ணின் மலட்டுத்தன்மையை தடுத்துவிட்டு, இயற்கை விவசாயத்தை கையிலெடுத்தால், விவசாயத் துறை மென்மேலும் செழிப்படையும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments