1. செய்திகள்

11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Temperatures will rise for the first 3 days on the 11th!
Credit : World Atlas

தமிழகத்தில் மே 11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

09.05.21

வெப்பச்சலனம் (Convection)

வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இலேசான மழை (Light rain)

விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather forecast)

10.05.21

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை (Dry Weather)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)

11.04.21 முதல் 13.01.21 வரை வடமேற்கு திரையில் இருந்துத் தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழகக் கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரில் சிலப் பகுதிகளில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • காற்றின் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் செய்யும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிர் வண்ணம் கொண்ட (Light colour) கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காட்டில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

கர்நாடகக் கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!

கொரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டம் - ஆயுஷ் அமைச்சகம் அதிரடி!

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

English Summary: Temperatures will rise for the first 3 days on the 11th! Published on: 09 May 2021, 04:02 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.