1. செய்திகள்

குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் வெளியீடு!

R. Balakrishnan
R. Balakrishnan
TNPSC GROUP-2

தமிழ்நாடு முழுவதும் சுமார் 117 இடங்களில் 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். தற்போது இத்தேர்விற்கான சரியான விடைகள் எது என்பது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குரூப்-2 மற்றும் 2A (Group 2 & 2A)

குரூப்-2 மற்றும் 2A பதவிகளில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (நேர்காணல் பதவிகள் மற்றும் நேர்காணல் அல்லாத பதவிகள்) கடந்த மே 21-ம் தேதி நடந்திருந்தது. இதில் தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது.

இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.

இவற்றின் மொத்த மதிப்பெண் 300-க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90-க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 – ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தேர்வின் தற்காலிக விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது.

மேலும் படிக்க

நீட் தேர்வு தள்ளிவைப்பு: தேர்வு வாரியம் அறிவிப்பு!

போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள் இனி இவர்களுக்கு இல்லை: புதிய அறிவிப்பு!

English Summary: Temporary Answer sheet Release for Group-2, Group 2A Exam! Published on: 28 May 2022, 08:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.