நடப்பு ஆண்டுக்கான பயிர்க் கடனை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் இது குறித்து தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில், ஆண்டு தோறும் பயிர்க் கடன் அளவை நிர்ணயிக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான விவ சாயிகள் பிரதிநிதிகள், வேளாண் அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நவம்பர் மாதம் நடத்தப்படும்.
இந்தக் கூட்டத்தில், அடுத்த நிதியாண்டுக்கான பயிர்கள் உற்பத்தி செலவினக் கடனளவை நிர்ணயிப்பது வழக்கம். அதன் அடிப்படையில், 2020 நவம்பரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரையிலான நிதி ஆண்டுக்கான பயிர்க் கடனளவு, கடன் திருப்பிச் செலுத்தும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டு, அந்த அறிக்கை மாநில அளவிலான தொழில் நுட்பக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி, ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.34,500, கரும் புக்கு ரூ.72,000, வாழைக்கு ரூ.70,000, பருத்திக்கு ரூ.27,300, உளுந்துக்கு ரூ.18,400 எனவும், மற்ற தோட்டக்கலை பயிர்கள், மீன்வளர்ப்பு, கால்நடை வளர்ப்புக்கான கடனளவும் நிர்ணயிக்கப்பட் டது. ஆனால், இந்த கடனளவு தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. அதேசமயம், 2020 டிசம் பர் முதல் 2021 ஏப்ரல் வரை பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது. அத்துடன் வரலாறு காணாத வகையில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே, இடுபொருள், எரி பொருள் விலை உயர்வை கருத்தில்கொண்டு, தமிழக அரசு, நிகழாண்டுக்கான கடனளவை கூடுதலாக 10 சதவீதம் உயர்த்தி புதிய கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
வறண்டக் களர் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி?
டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!
கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!
Share your comments