1. செய்திகள்

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர், முன்னிலை வகிக்கிறார் திரௌபதி முர்மு

Deiva Bindhiya
Deiva Bindhiya

The 15th President of the country, Vote counting Draupadi Murmu is leading

"திரௌபதி முர்மு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். இந்தியா தனது முதல் பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக பெற உள்ளது. இது இந்திய மக்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம்" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், NDA வின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு எதிர்கட்சியின் யஷ்வந்த் சின்ஹாவை எதிர்த்து முன்னிலை பெற்றதை கொண்டாடும் வகையில், டில்லியில் உள்ள மதர் தெரசா கிரசன்ட் சாலையில் நாட்டுப்புற கலைஞர்கள் பழங்குடியினர் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில், திரௌபதி முர்மு 540 வாக்குகளையும், எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட யஷ்வந்த் சின்ஹ 208 வாக்குகளையும் பெற்றுதுள்ளதாக தேர்தல் அலுவலர் பி.சி.மோடி அறிவித்தார்.

திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 3,78,000 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 1,45,000 என்றும், 15 எம்பிக்களின் வாக்குகளி செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்திருந்தார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அனைவருக்கும் வீடு திட்டம்.. உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்!

தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வாக்கு எண்ணிக்கை துவங்கியதும், முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதன் நிலவரத்தை தேர்தல் அலுவலர் பி.சி. மோடி அறிவித்துள்ளார். அதில் 540 வாக்குகளுடன் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார்.

மேலும் படிக்க:

IT ஊழியர்களே உஷார்... TCS, Accenture, HCL போன்ற நிறுவனங்களின் அதிரடி முடிவு!

PM Kisan திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இதை செய்ய வேண்டியது கட்டாயம்!

English Summary: The 15th President of the country, Vote counting Draupadi Murmu is leading

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.