அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்விச்சிறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதுவும் திமுக பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது.
மாணவர்கள் (Students)
தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமாக பள்ளியில் என்சிசி மற்றும் தேசிய சாரணர் அமைப்பில் உள்ள மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள். ஆனால் இனி மாணவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பள்ளி தூய்மை பணிகளை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செயல்படும் பணியாட்களை கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் எதிர்வரும் மழை காலத்தை கவனத்தில் கொண்டு கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் மழைக்காலத்தின் போது மேலோட்டில் உள்ள குப்பைகள் நீரில் நனைந்து கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்கின்றது.
எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூறையில் உள்ள காய்ந்த இலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதர்கள் மற்றும் குப்பை இன்றி காண்பதற்கு அழகாகவும், தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments