பிரதமரின் பீமா யோஜனா திட்டத்திற்கு ரூ.540 கோடி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
காப்பீடு
பொதுவாக விவசாயிகள் அரும்பாடுபட்டு சாகுபடி செய்த விளைபொருட்கள், எதிர்பாராதவிதமாக, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கி பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இழப்பீடு திட்டம்
இந்த நஷ்டத்தால், விவசாயிகளுக்கு நிதிச்சுமை ஏற்படுவதால், இதனைத் தடுக்க ஏதுவாக, பிரதமரின் பீமா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரு.540 கோடி
இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ், பயிர் இழப்பீடாக ரூ.540 கோடியை விடுவிக்கும் பணிகளை வேகப்படுத்துமாறு, காப்பீடு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ.311 கோடி
இதில் 311 கோடி ரூபாய், விடுவிக்கப்பட்டதாக வேளாண் காப்பீடு நிறுவனமான (ஏஐசி) தெரிவித்துள்ளது. இதில் பெரும்பகுதி தொகை ராஜஸ்தானின் பார்மர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கானது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக காரீஃப் பருவ சாகுபடிக்காக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments