கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் இன்றைக்குள் பணத்தை திரும்பி செலுத்தாவிடில் அரசின் அனைத்து சலுகைகள் மற்றும் திட்டங்களை நிறுத்தப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
பி.எம். கிசான் முறைகேடு
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் பலர் இந்த திட்டத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதை தொடர்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி முறைகேடாக பணத்தை பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர்.
கடலூரில் ரூ. 13 கோடி முறைகேடு
கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோா் உள்பட சுமாா் 64 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இவா்களுக்கு சுமாா் ரூ.13 கோடி வரை முறைகேடாக நிதி வழங்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் அமைத்த குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விசாரணையின் அடிப்படையில் முறைகேடாக பெற்ற விவசாயிகளிடம் இருந்து இது வரை ரூ.11.40 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேடு தொடர்பாக மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டனா். மேலும்13 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணத்தை செலுத்த உத்தரவு
இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் இன்றைக்குள் (அக்.22)முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மோசடிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
விவசாயக் கடன் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
Share your comments