ஆர்பிஐ தனது 3 நாள் ஆய்வுக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. இப்போது நீங்கள் உங்கள் கனவு வீட்டை எளிதாகக் கட்டலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வீடுகளை கட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. இப்போது கூட்டுறவு வங்கிகள் 1.40 கோடி வரை கடன் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2011-ம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளுக்கான கடன் வரம்பு தொடர்பாக திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது இருக்கும் இடத்திலேயே கடன் வழங்கப்படும் வசதியை குறித்து தெரிவிக்கப்பட்டது. இது தவிர, ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
1.40 கோடி வரை கடன் கிடைக்கும்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதிக் கொள்கை மதிப்பாய்வை வெளியிடுகையில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (யுசிபி) இனி ரூ. 1.40 கோடி வரை வீட்டுக் கடன் வழங்க முடியும் என தெரிவித்தார். இதுவரை இந்த வரம்பு ரூ.70 லட்சமாக இருந்தது. இதுதவிர இதுவரை ரூ.30 லட்சமாக இருந்த ஊரக கூட்டுறவு வங்கியில் இனி ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்.
கிராமப்புற கூட்டுறவு வங்கி விதிகள்
- கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் (மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்) மற்றும் அவற்றின் நிகர மதிப்பு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை நிர்ணயிக்கும். புதிய விதியின்படி, 100 கோடி ரூபாய் வரை நிகர மதிப்புள்ள வங்கிகள் ஒவ்வொரு நபருக்கும் 50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க முடியும். இதன் முந்தைய வரம்பு 20 லட்சமாக இருந்தது. மீதமுள்ள வங்கிகள் ரூ.75 லட்சம் வரை கடன் தரலாம்.
- இதுதவிர, இதுவரை அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை திட்டங்களுடன் தொடர்புடைய பில்டர்களுக்கு கடன் வழங்க கிராமிய கூட்டுறவு வங்கி அனுமதிக்கப்படும்.
- இது மட்டுமின்றி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், ஷெட்யூல்டு வங்கிகள் போன்று வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் அதாவது வீட்டுக்கே சென்று வசதியை வழங்குமாறு நகர்ப்புற கூட்டுறவு வங்கியை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments