உணவு பதப்படுத்துதல் துறையில், உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
வேளாண் துறையை மேம்படுத்த நடவடிக்கை
வடக்கு மண்டல உணவு பதப்படுத்துதல், 3வது உச்சி மாநாட்டை இந்திய தொழில் கூட்டமைப்பு காணொலி காட்சி மூலம் நடத்தியது. இதில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டு பேசினார், அப்போது நாட்டின் உணவு மற்றும் தோட்டக்கலை திறனை மேம்படுத்தவும், வேளாண் துறையில் முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தற்போதுள்ள நிறுவனங்களில் சிறப்பான சூழலை ஏற்படுத்தவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உணவு பதப்படுத்துதல் துறைக்கு 11,000 கோடி
உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, உணவு பதப்படுத்துதல் துறையில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் சுமார் 11 ஆயிரம் கோடி செலவழிக்கப்படும்.
முறைசார தொழில் பிரிவில் இருக்கும் குறு நிறுவனங்கள் இடையே போட்டியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பிரதமரின் குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தை (PMFME) உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இத்திட்டம், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
மேலும் படிக்க....
நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
Share your comments