இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களைத் தொடர்ந்து டிராக்டர்களுக்கும் அவை வெளியேற்றும் மாசு குறித்த நெறிமுறைகள் வகுக்ககப்பட்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு அக்டோபர் முதலும், கட்டுமான உபகரண வானங்களுக்கு வரும் ஏப்ரல் 2021 முதலும் அமலுக்கு வருகிறது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் டூ-வீலர் மற்றும் கார்களில் பிஎஸ்-4 ரக வாகன தயாரிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் பி.எஸ்-6 ரக வானங்கள் மட்டுமே தற்போது தயாரிப்புக்கும் விற்பனைக்கும் அனுமதி உள்ளது. பெரும்பாலான டீசல் வானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோட்டார் வாகன சட்டம் 1989ல் GSR 598 (இ) வரைவு திருத்தம் மேற்கொள்வது குறித்து செப்டம்பர் 30, 2020 தேதி, டிராக்டர்களுக்கு TRM-IV மாசு வெளியேற்றும் விதிமுறைகள் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ஓராண்டு நீட்டித்து அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த கருத்துக்களை வேளாண்துறை, டிராக்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வேளாண் அமைப்புகளிடமிருந்து அமைச்சகம் பெற்றுள்ளது. கட்டுமான உபகரண வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 2021 முதல் மாசு வெளியேற்றும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
மேலும் படிக்க...
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
Share your comments