1. செய்திகள்

மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஆகஸ்ட் 28 அன்று நடைபெறவுள்ளது!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Rice cultivation

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் நடைபெறும் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சியில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடக்க உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று கூறியதாவது:

ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு விதமான இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் நடக்கும் நெல் சாகுபடி தொடர்பான கருத்தரங்கில் பிரபல வேளாண் வல்லுநர் திரு. பாமயன் அவர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார். திரு. பூச்சி செல்வம் அவர்கள் நெல் பயிரில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

திரு. கோ. சித்தர் அவர்கள் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து திரு. ஆலங்குடி பெருமாள் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.

இது தவிர இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு பின்பற்ற வேண்டிய நுட்பங்கள், நெல்லுக்கு உகந்த இடுப்பொருட்கள் பயன்பாடு, செலவில்லா பயிர் மேலாண்மை, கால்நடை இல்லாதவர்களும் இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். அத்துடன், இந்நிகழ்வில் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்களும் உடன் பங்கேற்றார்.

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் அதிரடி கடிதம்!

English Summary: The Great Rice Cultivation Seminar and Exhibition will be held on August 28! Published on: 24 August 2022, 07:15 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.