தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய அரசு (The new government)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
மரியாதை (Tribute)
இதனைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மக்கள் தீர்ப்பு (People`s Judgement)
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில்,
சட்டப்சபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ளனர்.
இதயப்பூர்வமான நன்றி (Heartfelt thanks)
இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துத் தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் இதயப்பூர்வமான நன்றி. தமிழகம் ஒரு பாதாளத்திற்குப் போயிருக்கிறது என்பதை அறிந்த மக்கள், அதை சரி செய்வதற்காக தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர்.
பொறுப்பை உணர்ந்து (Realizing responsibility)
எந்த எதிர்பார்ப்போடு எந்த நம்பிக்கையுடன் அந்த வெற்றியை தந்துள்ளனரோ அதற்கேற்ற வகையில் பொறுப்பை உணர்ந்து எங்கள் ஆட்சி அதை நிறைவேற்றி தரும்.
கருணாநிதி இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எங்களது ஏக்கம், நிறைவேறாமல் போய்விட்டது. இருப்பனும் அந்த ஏக்கம் இன்று ஓரளவுக்கு போயிருக்கிறது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் (Promises will be fulfilled)
மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்று எங்களுக்கு ஓட்டளித்தவர்கள் 'இவர்களுக்கு ஓட்டளித்தது தான் நல்லதே' என மகிழும் வகையிலும், ஓட்டளிக்காதவர்கள் 'இவர்களுக்கு ஓட்டளிக்காமல் சென்று விட்டோமோ' என நினைக்கும் வகையிலும் எங்கள் பணி தொடரும்.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம்.
விரைவில் பதவியேற்பு விழா
நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முறையாகத் தலைவரைத் தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்புத் தேதியை முடிவு செய்து அறிவிப்போம். கொரோனா காலத்தை மனதில் வைத்து பதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன்,.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரிந்த சினிமா நட்சத்திரங்கள்!
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
Share your comments