1. செய்திகள்

சுகாதாரத் துறையைச் சரிசெய்ய வேண்டும்: வல்லுநர்கள் பேச்சு!

Poonguzhali R
Poonguzhali R
The Indian health sector needs to be aligned: experts talk

பழங்குடியினச் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 104 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடியினர் இந்தியாவில் வாழ்கின்றனர், 705 பழங்குடியினங்களில் பரவி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8.6 சதவீதம் பேர் உள்ளனர்.

ஆனால், சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடுகையில், பழங்குடியினர் தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.  அதோடு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் உள்ளனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் அமைச்சகத்தின் Tribal Health In India – Bridging The Gap And Roadmap Ahead' அறிக்கையின்படி, பழங்குடியின மக்களில் 28.5 சதவீதம் பேருக்கு நீர்க் குழாய்கள் மூலம் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 10.7 சதவீத பழங்குடியினருக்கு மட்டுமே குழாய் நீர் கிடைக்கிறது என  பழங்குடி மக்கள் குறித்த அட்டவணை ஒன்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு 4 பழங்குடி மக்களில் 3 பேர் (74.7 சதவீதம்) திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தொடர்கின்றனர். இந்தியாவில் உள்ள பழங்குடியினப் பகுதிகள் மூன்று மடங்கு நோய்களை எதிர்கொள்வதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, காசநோய், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் அதிகமாக இருப்பதாகவும் அறிக்கை கூறியது.

ஒவ்வொரு ஆண்டும் உலகச் சுகாதார தினத்தை ஏப்ரல் 7 ஆம் தேதி உலகச் சுகாதாரத் தினமாகக் கொண்டாடும் நிலையில், ’Our Health, Our Planet' என்ற கருப்பொருளுடன், சுத்தமான காற்று, நீர் மற்றும் உணவு மூலம் உலகை மறுவடிவமைப்பதில் கவனம் செலுத்தி, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கான இயக்கத்தை வளர்ப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. பழங்குடியினர் உட்பட  ‘Health for All’ என்ற இலக்கை இந்தியா எவ்வாறு அடைய முடியும் என்பதைப் புரிந்து  செயல்பட வேண்டும்.

இந்தியாவில் பழங்குடியினர் ஆரோக்கியம் - Tribal Health In India – Bridging The Gap And Roadmap Ahead என்ற அறிக்கையின்படி, பழங்குடியின மக்களிடையே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் அதிக அளவில் கண்டறியப்பட்டது. பழங்குடியினர் அல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, பழங்குடியின மக்களிடையே இருக்கும் உடல் நிலை பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளின் அளவை விட குறைவான நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு, பழங்குடியினர் அல்லாத மக்களை விட பழங்குடியின மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ளது, இது நேரடியாகப் புரதம், கலோரிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களைப் போதுமான அளவு உட்கொள்ளாததன் விளைவாக இருக்கிறது.  எனவே, பழங்குடி மக்களுக்கு அனைத்து வசதிகளும் சரிவர கிடைக்கச் சுகாதாரத் துறையினைச் சீர் செய்ய வேண்டும் எனப் பழங்குடி இன மக்களின் நலன் கருதும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க...

இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!

பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!

English Summary: The Indian health sector needs to be aligned: experts talk Published on: 09 April 2022, 11:41 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.