Krishi Jagran Tamil
Menu Close Menu

நெற்பயிரில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதற்கான தீர்வுகள்

Friday, 06 September 2019 01:36 PM
Microbial Deficiency

தாவர வளர்ச்சிக்கு நுண்ணூட்டச் சத்து என்பது அடிப்படையான ஒன்று. நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் 16 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள் என்றே கூறலாம். கால்சியம்,  மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண்ணூட்ட சத்துப் பொருட்கள்.

பயிர்களுக்கு தேவையான இதர சத்துக்களான ஆஸ்சிஜன், கார்பன், ஹைட்ரஜன் போன்றவற்றை பாசனம் செய்யும் நீரிலிருந்து பெற்று கொள்கின்றன. பெரும்பாலான சத்துக்களை நெற்பயிர்கள் நீரிலிருந்தும், மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. நெற்பயிறுக்கு மிக தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் அடிப்படை என்பதால் இவற்றை நாம் உரங்களுடன் கலந்து பயிர்களுக்கு செலுத்துகிறோம். 

Microbial nutrition

தமிழகம் முழுவதும் பலவகையான மண் வகைகள் காணப்படுகின்றன. மண் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாடு இருப்பது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. இதனால் நெற்பயிரின் மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நுண்ணூட்ட சத்து குறைபாட்டிற்கான காரணங்கள்

 • அதிக மகசூல் வேண்டி உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்களை பயன்படுத்துவதால் மண்ணின் ஊட்டச்சத்து குறையும்.
 • நுண்ணூட்ட சத்து பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம், இயற்கை உரங்களை கைவிட்டது ஆகும். பசுந்தாள் உரம், கம்போஸிட் உரம், தொழுவுரம் போன்றவற்றை பயன்படுத்தாத நிலை, முறையாக பயிர் சுழற்சி செய்யாமல் இருப்பது ஆகியனவாகும்.
 • பருவநிலை மாற்றத்தினாலும், மழை வெள்ளம் ஏற்படும் போதும் அதிக அளவிலான மண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு மண்ணின் ஊட்டச்சத்தை குறைத்து விடுகிறது.
 • தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் மண்ணின் தழைச் சத்து, மணிச் சத்து குறைந்து விடுகிறது.
 • களி மண், மணல் போன்ற மண்வகைகள், உப்புச் சத்துக்கள் நிறைந்த நிலத்தடி நீர்ப்பாசனம் போன்ற காரணங்களால் நுண்ணூட்ட சத்து குறைபாடு ஏற்படும்.

நுண்ணூட்ட சத்து மேலாண்மை

 • இயற்கை உரங்களான தொழு உரம், கம்போஸ்ட் உரம், பதப்படுத்தப்பட்ட கரும்பு தோகை உரம் என ஏதேனும் ஒன்றை ஆண்டுக்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.
 • நடவு வயலில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாகம், 20 கிலோ மண் விதத்தில் கலந்து, தொழு உரத்துடன் கலந்து மண்பரப்பின் மீது தூவி பின்பு நடவு செய்ய வேண்டும்.
 • களிமண் நிலமாக இருக்குமானால் 5 கிலோ துத்தநாகத்தை அடிஉரமாக இட்டு, மீதி உரத்தை மூரியேட் பொட்டாஷ் உரத்துடன் கலந்து பயன்படுத்தலாம்.
 • ஒரு வேளை மண்ணில் மணி சத்துக்கள் அதிகம் காணப்பட்டால் துத்தநாகத்தை கரைசலாக பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
 • வேளாண் துறையினரால் நெற்பயிருக்கு தேவையான நுண்ணூட்ட சத்துகள் சரிவிகிதத்தில் கலந்து விற்பனை செய்வதால் நேரடியாக இதனை பயன்படுத்தலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் நெற்பயிரில் ஏற்படும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Microbial Deficiency Microbes need nutrients Microbial Activity in Paddy Nitrogen Level Methods of rice cultivation Paddy soil fertility soil microbiota Microbial communities soil fertility
English Summary: Importance of Microbial Nutrient and how to improve paddy soil fertility

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது ; 100 ரூபாய்க்கு விற்பனை!!
 2. மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு
 3. குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!
 4. ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!
 5. FSSAI Job Offer: துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை - முழு விவரம் உள்ளே!!
 6. குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடிக்கு நாற்றங்கால்: ரூபாய் 1200 மானியம்!
 7. அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை மையம் தகவல்!
 8. உணவின் தரத்தை ஆராய நடமாடும் சோதனை கூடம்! உணவு பாதுகாப்பு துறை மதுரைக்கு வழங்கல்
 9. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு ; டிசம்பர் 1 கோட்டையை நோக்கி பிரச்சார பயணம்!!
 10. விதை பெருக்கு திட்டம் : நெல் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 75% கொள்முதல் விலை - வேளாண் துறை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.