1. செய்திகள்

கொரோனா அதிகரித்தாலும் முகக்கவசம் கட்டாயமில்லை - எப்போது முதல்?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The mask is not mandatory even if the corona increases - since when?

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தப் போவதில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். ஆசிய நாடுகளில் ஒன்றான  சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், அவ்வப்போது உருமாறி வேறு பெயர்களில், வலம் வருகிறது.

இதனால், கொரோனா வைரஸின் 3 அலைகள் ஓய்ந்து 4 வது அலையும் வந்துவிட்டது. இது, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கட்டாயம் இல்லை

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, நெதர்லாந்து நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தி உள்ளது.
அதன்படி, வரும் 23 ஆம் தேதி முதல், பொது போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயம் இல்லை.

எனினும் விமானங்களிலும், விமான நிலையங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இரவு விடுதிகள் மற்றும் பிற பெரிய அளவிலான நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு தேவைப்படும் டிஜிட்டல் கோவிட்-19 நுழைவுச்சீட்டு முறையையும் அடுத்த வாரம் முதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், கொரோனா தொற்றுடன் வாழ நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த தளர்வு அளிக்கப்படுவதாக நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

அச்சம்

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

மாரடைப்பைத் தடுக்கும் பழம்- தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்!

தினமும் நடைபயிற்சி - அசத்தலான 8 நன்மைகள்!

English Summary: The mask is not mandatory even if the corona increases - since when? Published on: 21 March 2022, 01:08 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.