1. செய்திகள்

பென்சன் தொகை உயரப்போகுது, அரசின் பெரிய முடிவு

T. Vigneshwaran
T. Vigneshwaran
Pension

பென்சன் வாங்குவோரின் நீண்டநாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசு பச்சை கொடி காட்டினால் பென்சன் தொகை விரைவில் உயரும்.

தற்போது ஓய்வூதியதாரர்கள் 80 வயதை தொடும்போது பென்சன் தொகை 20% உயர்த்தப்படுகிறது. எனினும், 80 வயதில் பென்சன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்தினால் சரியாக இருக்கும் என பென்சனர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

அண்மையில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இதுகுறித்து ஓய்வூதியதாரர் நல சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதே பரிந்துரையை வழங்கியுள்ளது.

இந்நிலையில், பென்சன் தொகையை ஆண்டுக்கு 1% உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை ஆண்டுக்கு 1% உயரும். இதுமட்டுமல்லாமல், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதால் மருத்துவப் படித் தொகையை (Fixed Medical Allowance) உயர்த்தி தர வேண்டும் என ஓய்வூதியதாரர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மருத்துவப் படித் தொகை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதுபோக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு ஆதரவு தர வேண்டும் எனவும் பென்சனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் விரைவில் ஆட்சி கலைப்பு!

English Summary: The pension amount is going up, a big decision of the government Published on: 18 April 2022, 06:07 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.