சட்டசபை தேர்தல் வருவதால், பொங்கல் பரிசுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் ரொக்கமாக வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணமாக, இந்த தொகையை, இரண்டு கோடி குடும்பங்களுக்கு வழங்க, திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசு, பொங்கல் பண்டிகையின் போது, ரேஷன் கடைகளில் (Ration Shop), 2.02 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதற்காக, 2,250 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
அவகாசம்:
2021 பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் பரிசாக (Pongal Gift), 2,000 ரூபாய் வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை, அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்கும் வகையில், 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களையும், அரிசி வகைக்கு மாற்ற, அரசு அனுமதி (Permission) வழங்கியுள்ளது. வருகின்ற 20 ஆம் தேதி வரை, சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை அரிசி கார்டாக மாற்ற, அவகாசம் (Deadline) அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு ரூ. 2,000:
தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், கொரோனா நிவாரண நிதியாக (Corona Fund), ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அந்த தொகையை, மத்திய அரசு வழங்க ஒப்புக் கொண்டு உள்ளது. எனவே, மத்திய அரசு அளிக்கும், கொரோனா நிவாரண நிதியை, அப்படியே பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வீதம் வழங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, இம்மாத இறுதியில் வெளியிட்டு, ஜனவரி முதல் வாரத்திற்குள், கார்டுதாரர்களுக்கு வழங்கி முடிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக மக்களுக்கு வழங்கவிருக்கும், இந்த பொங்கல் பரிசு ஒருபுறம் இருக்க, கனமழையால் மழையில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசா தான்! மானிய விலையில் எலக்ட்ரிக் ரிக்ஸா!
இதை மட்டும் செய்தால் Whatsapp இல் பணம் சம்பாதிக்க வாய்ப்பு
Share your comments