கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையான காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டியை (Interest) திருப்பித் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது. இதனால், கூட்டு வட்டி (compound interest) கட்டிய அனைவருக்கும், அவர்கள் கட்டியத் தொகையானது திருப்பி அளிக்கப்படும்.
கூட்டு வட்டி ரத்து:
இதற்கு முன்பாக, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கூட்டு வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, தற்போது வங்கிகள் முன்னதாக வசூலித்த கூட்டு வட்டியை திருப்பி அளிக்க அனைத்து வங்கிகளுக்கும், RBI உத்தரவிட்டுள்ளது. கூட்டு வட்டி ரத்தானதால், வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மற்றும் மாதந்தோறும் EMI செலுத்துபவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் (Corona Virus) ஊரடங்கில், அனைவரும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அனைவருக்குமே வருமானம் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரையால் 6 மாதங்களுக்கு, கூட்டு வட்டியை ரத்து செய்துள்ளது RBI (Reserve Bank of India)
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு குறைத்தது எஸ்பிஐ!
Share your comments