மாவட்டம் சிவகாசி நகரின் மையப்பகுதில் அமைந்திருக்கிறது காசி விசுவநாதர் ஆலயம் (Sivakasi Kasi Viswanathar Temple). இந்த கோவிலின் மூலவர் சிவன் விசுவநாதராகவும், அன்னை பார்வதி விசாலாட்சியாகவும் அமைந்து அருள்புரிகின்றனர்.
இந்த கோவிலானது சிவகாசியில் உள்ள கடைத்தெருவில் அமைந்துள்ளது. கோவில் மூன்று நிலைகளுடைய கோபுரத்தினைக் கொண்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் இருந்து கொடிமரம் அமைந்துள்ள மண்டபம் வரை தூண்களாலான மண்டபம் உள்ளது. கருவறையானது நுழைவாயிலுக்கு நேராக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
லிங்க வடிவிலான காசி விசுவநாதரின் சிலை கருவறையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் முருகனின் உருவங்கள் அமைந்துள்ளன.
சிவகாமியின் கருவறையானது மூலவரின் கருவறைக்கு இணையாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறைக்கு எதிராக உள்ள இரண்டாவது கொடிமரம், காசி விசுவநாதரின் சந்நிதிக்கு எதிராக உள்ள கொடிமரத்திற்கு இணயாக அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
இந்த கோவிலில் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகர், துர்கை, நவகிரகங்கள் மற்றும் நடராசர் ஆகிய தெய்வங்களின் சிறிய சந்நிதிகள் காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சியின் சந்நிதிகளைச் சுற்றி அமைந்துள்ளன.
இந்த கோவில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டமாக சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் அனைத்து சந்நிதிகளையும் உள்ளடக்கி கருங்கற் சுவர் அமைந்துள்ளது. இக்கோவிலானது காலையில் 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். முழுநிலவு அன்று மட்டும் நாள்முழுதும் திறந்திருக்கும்.
மேலும் படிக்க
Share your comments