1. செய்திகள்

தமிழகத்தில் இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்! ஏப்ரல் 6-இல் வாக்குப்பதிவு!

KJ Staff
KJ Staff
Election 2021
Credit : Daily Thandhi

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் (Election) தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.

இறுதிகட்ட பிரச்சாரம்:

தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), அகில இந்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினார்கள். இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்குசேகரித்தனர். எடப்பாடி பகுதியில் முதல்-அமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவில்பட்டியில் கமல்ஹாசன் பேசியதாவது:- என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே யாருமே முழுநேர அரசியல்வாதி கிடையாது. நான் விரும்பி வந்தேன் என்பதை விட வரலாறு என்னை இங்கு தூக்கி கொண்டு வந்திருக்கிறது.

சித்தரவையில் சிக்கி தவித்த சீதையை மீட்ட அனுமனை போல தமிழக மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரச்சாரம் ஓய்ந்தது

இந்த நிலையில், இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 7 மணிக்கு பின் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது. 7 மணிக்கு பின் வாட்ஸ் அப் (Whatsapp), பேஸ்புக் உள்ளிட்டவற்றில் பிரசாரம் செய்ய கூடாது என்றும், தடையை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் (Election commision) தெரிவித்துள்ளது.

7 மணிக்கு பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மானாவாரியில் கோடை பருவ சாகுபடியில், அதிக மகசூல் பெற சில நுணுக்கங்கள்!

மரக்கன்று நட விழா தேவை இல்லை: பிரதமரிடம் பாராட்டு பெற்ற யோகநாதன்!

English Summary: The rest of the campaign in Tamil Nadu today! Vote on April 6th! Published on: 04 April 2021, 08:16 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.