தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தற்காலிகமாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்துவதாக அறிவித்ததுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
கரோனாவின் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. எனினும் வேளாண் பொருட்கள் உற்பத்தி மீதான தடைக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தது. இதனால் ஒழுங்குமுறை கூடங்கள் மற்றும் உழவர் சந்தைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது.
டெல்டா மாவட்டங்கலான தஞ்சை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் அறுவடை பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் பணியை மேற்கொண்டு வருகிறது. 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் சீசன், கடந்த அக்டோபர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் வரை நடை பெறும். இதுவரை அரசின் சார்பில் 1,950 கொள்முதல் மையங்களின் வாயிலாக,19.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 90 சதவீதத்திற்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதால், ரேஷனில் வழங்க அரசிடம் போதியளவு கையிருப்பு உள்ளதாக உணவு பொருள் அதிகாரி தெரிவித்தார். மேலும் தற்சமயம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் தற்காலிகமாக கொள்முதல் பணி நிறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
Share your comments