மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 100 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகவில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவேரி ஆறும் டெல்டா மாவட்டமும்
கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிகத்தில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சென்று மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூர் அணையில் இருந்து உருவாகும் காவிரி ஆறு ஈரோடு, கரூர் வழியாக மாயனூர் தடுப்பணையை அடைந்து அங்கிருந்து காவிரி ஆறு திருச்சி முக்கொம்பு மேலணை வரை அகன்ற காவிரியாக செல்கிறது. முக்கொம்பு மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாக பிரிந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க உதவியாக இருந்து வருகிறது.
மேட்டூர் அணையின் உயரம் 120 அடியாகும், ஆனால் அதிகரித்து வரும் நீர் வரத்தால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி விட்டது. தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு இது குறித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments