11 ஏக்கர் நிலத்தில் "மியாவாக்கி" முறையில் இடைவெளி இல்லா 70 ஆயிரம் மரங்களை நட்டு, ஈரோடு இளம் தொழிலதிபர் (Young Entrepreneur) ஒருவர் அடர் காட்டை உருவாக்கி, சாதனை படைத்துள்ளார். மரம் இயற்கை அளித்த வரம் என்பதை உணர்ந்து செயல்பட்ட இவரின் செயல் பாராட்டுக்குரியது.
70 ஆயிரம் மரங்கள்:
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! - ஊர்கள் தோறும் காடுகள் உருவாக்குவோம் ! என வலியுறுத்தும் இயற்கை ஆர்வலர்கள், காடுகள் (Forest) நாட்டின் கண்கள் என வர்ணிக்கிறார்கள். ஈரோட்டைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் இளங்கவி (Ilankavi) என்பவர், ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை அனுமதி பெற்று, சீரமைத்து, உரமிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் 70 ஆயிரம் மரங்களை வளர்த்து, சாதனை படைத்துள்ளார்.
மரங்களின் வகைகள்:
அடர்காட்டில், நாட்டு மரங்களான ஆல மரம், அரச மரம், வேம்பு (Neem), புங்கன், மாமரம், பனை மரம், புளியமரம், விளா மரம் என 40-க்கும் மேற்பட்ட மர வகைகள் இடம்பெற்றுள்ளன, இது தவிர,கொய்யா, நெல்லிக்காய், பப்பாளி (Papaya) மரம், சப்போட்டா மரம், நாவல் மரம், மாதுளை என 10-க்கும் மேற்பட்ட பழ மரங்களும் அழகிய பூஞ்செடிகளும் மியாவாக்கி (Miyawaki) முறையில் இடைவெளி இல்லாமல் ஒரு அடர் காடாக உருவாகி உள்ளது.
மனிதன் இல்லாமல் மரங்கள் வாழ முடியும் - ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. பணம் கொடுத்து குடிதண்ணீர் வாங்கும் சூழல் உருவாகி உள்ள சூழலில், எதிர்காலத்தில் சுத்தமான காற்றுக்கும் பொதுமக்கள் காசு கொடுக்கும் நிலை உருவாகும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். ஈரோடு இளம் தொழிலதிபர் இளங்கவி போல, ஊருக்கு ஒருவர் உருவானால், நிச்சயம் மரங்கள் வரம் தரும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments