ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 16ம் தேதியும் விடுமுறை அளிப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடல் (Closing of schools)
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
எனினும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவ- மாணவிகளின் நலன் கருதி, பொதுத்தேர்வுகள் உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் எல்லாத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததால், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டுக் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேநேரத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாகப் பொதுத்தேர்வு நடத்தப்படும்.
திட்டமிட்டபடிப் பள்ளிகள் திறப்பு (Opening of schools as planned)
ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டார்.
மாணவர்கள் மகிழ்ச்சி (The students were delighted)
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
16ம் தேதியும் விடுமுறை (Holiday on the 16th)
இதனிடையே ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 16ம் பள்ளி வேலைநாளாக உள்ளது. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலன்கருதி, அன்றைக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 16ம் தேதியும் விடுமுறை அளிப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
8 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு!
ஹெல்மட் அணியாவிட்டால் two wheeler பறிமுதல்- நாளை முதல் கெடுபிடி!
Share your comments