தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இந்த வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பல விவசாயிகள் கரும்பு பயரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கத்தை விட கரும்புகள் பயிரிடப்பட்டது. இதில் பொங்கல் பண்டிகைக்கு அரசு ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்களை கொடுப்பதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பலர் பொங்கலுக்கு கரும்புகளையும் இந்த பொங்கல் பொருட்களோடு தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து பொங்கல் பரசு பொருட்களுடன் கரும்பும் தரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக 6 அடி மற்றும் அதற்கு மேல் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்தது. இதில் விவசாயிகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட கரும்புகளை மற்றும் அரசு கொள்முதல் செய்ததால் மீதமுள்ள கரும்புகளை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்றனர். தஞ்சையை பொருத்த வரையில் பல வியாபாரிகள் கரும்புகளை வாங்காததால் பல கரும்புகள் இன்னும் அறுவை செய்யாமல் இருக்கும் நிலையில் கரும்புகளை வாங்கிய வியாபாரிகள் வாங்கிய கரும்புகளை விற்பனை செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கான கரும்புகள் வீணாகியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை ராஜப்பா பூங்கா அருகே ரூ.1 லட்சத்துக்கு கரும்புகளை வாங்கி வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே கரும்புகளை விற்று மீதமுள்ள கரும்புகளை இதுவரையில் விற்க முடியாமல் தினறி வருகிறார் ஒரு வியாபாரி. இதுகுறித்து அவர் கூறுகையில், "என் பேரு நாகராஜனுங்க. நான் இந்த பொங்கல் பண்டிகைக்காக சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து 110 ரூபாய் ரேட்டுக்கு வாங்குனேன். வாங்கிய கரும்புகள் கிட்டத்தட்ட இதுவரையில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்துள்ளேன், அரசு கரும்புகளை கொடுத்ததால் சாமி கும்பிடுவதற்காக மட்டும் ஒரே ஒரு கரும்பு கொடுங்கள் என்று பலர் வந்து கேட்கின்றனர்.
ஒரு கட்டு கரும்புகளையெல்லாம் பொதுமக்கள் வாங்கவில்லை. ஒரு கரும்பு கட்டு 150 ரூபாயாக்கு விற்றேன். பிறகு வியாபாரம் சரியாக போகாததால் நானும் வந்த விலைக்கு விற்று விடலாம் என ஒரு கட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இருந்தும் யாரும் வாங்கவில்லை. கிடைத்த வரைக்கும் லாபம் என ரூ.10, ரூ.20 ஏன் இலவசமாக கூட கொடுத்தாலும் எல்லோறும் வாங்க மறுக்கின்றனர்.
சென்ற ஆண்டு கூட இந்த அளவுக்கு எனக்கு நஷ்டமில்லை. நான் மட்டும் இல்லை தஞ்சையில் என்னைப் போன்ற பல வியாபாரிகள் இதுபோன்று தான் கரும்புகளை வாங்கி விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த கரும்புகளை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. மாடுகளுக்கு மட்டுமே கொடுக்க முடியும். என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட எனக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளேன். என்னைப் போன்ற பல வியாபாரிகளும் இது போன்ற நஷ்டம் அடைந்துள்ளனர்” என மிகவும் மன கவலையுடன் கூறினார்.
மேலும் படிக்க:
Share your comments