பி.எம் கிசான் திட்டத்தின் நிதி நிதியை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்த அவர், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் என்பது விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் நேரடி பணம் பரிமாற்ற திட்டமாகும், இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாய குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 / - நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வழங்கப்படுகிறது.
இந்த தொகை மூன்று மாத தவணைகளில் ரூ. 2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அசாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலங்களைத் தவிரப் பிற மாநில பயனாளிகளுக்கு ஆதார் தரவுகளின் அடிப்படையில் பணம் செலுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு செய்வதோ, ஒப்புதல் அளிக்கப்படுவதோ இல்லை. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் 70,82.035 விவசாயக் குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன் அடைகின்றன. அந்த மாநில விவசாயிகளுக்கு ரூ.7,632,695 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தகுதியற்ற விவசாயிகளிடம் இருந்து உதவித் தொகையைத் திரும்ப வசூலிப்பது குறித்துத் தெரிவித்த அமைச்சர் தோமர் , மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 11ம் தேதி வரை ரூ.78.37 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Share your comments