வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இந்த இரண்டு நாட்களில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கிகள் இணைப்பு (Banks link)
இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளையும் சீர்படுத்தி, சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த வங்கிகளாக மாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக நலிந்த வங்கிகளை பெரிய வங்கிகளுடன் ஒன்றிணைப்பது போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 9 - 10 வங்கிகள் மட்டுமே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு சீரமைப்புப் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தனியார்மயமாக்கல் (Privatization)
இன்னொரு பக்கம் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. 2021 மத்திய பட்ஜெட் அறிக்கையிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்துத் தெரிவித்திருந்தார். இந்த நிதியாண்டில் மட்டும் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மட்டும் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு பொதுத் துறை வங்கிகள் மற்றும் அதன் ஊழியர்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதை வங்கி யூனியன் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்ற. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் நடத்தப்படவுள்ளது.
டிச.16,17
டிசம்பர் 16,17ஆகிய இரண்டு நாட்களில் வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால், டாமல் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று வங்கிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
சேவைகள் பாதிப்பு (Vulnerability to services)
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
திட்டமிடல் அவசியம் (Planning is essential)
இதனால் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.எனவே வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகள் தொடர்பான தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டால் நெருக்கடியைச் சமாளிக்கலாம்.
மேலும் படிக்க...
மும்பையில் 8 பேருக்கு ஒமிக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 21ஆனது!
Share your comments