அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு பொருந்தாது. அரசு அனுமதி பெறாமல், எந்த சலுகைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒப்புதல் கட்டாயம்
இது தொடர்பாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் கூறியுள்ளதாவது:அரசு ஊழியர்கள் சலுகை தொடர்பான அரசாணைகள் அனைத்தும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தாது.
ஊதிய மாற்றம், பணி சலுகை போன்றவற்றை, அப்படியே தங்கள் ஊழியர்களுக்கு அமல்படுத்தக் கூடாது. அதற்கு, அரசு ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம்.
நிதிச்சுமை
அரசு சலுகைகள் அனைத்தையும் நிதித் துறை ஒப்புதல் பெறாமல் அமல்படுத்துவதால், நிதிச்சுமை கூடுதலாகிறது. இது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அரசு ஊழியர்கள் அல்ல
பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல.எனவே, அரசு ஊழியர் சலுகை அனைத்தையும், அவர்கள் கோர முடியாது.
நெறிமுறைகள்
நிறுவனங்கள் தனித்து செயல்படுபவை. எனவே, அவை நிதியை நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே சில வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments