1. செய்திகள்

இந்த ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
These ration cards will be disabled soon!

தொடர்ந்து சில மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுத்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டிற்கே விநியோகம் (Home delivery)

டெல்லி அரசு வீட்டிற்கேச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது. இதன்மூலம் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க முடியும் என்கின்றனர்.

ஆனால் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்து விட்டதால் இந்த திட்டம் அப்படியே நின்றது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கணக்கெடுக்கும் பணி (Survey work)

இந்த சூழலில் ஏராளமான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான கணக்கெடுக்கும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. அதாவது, கடந்த மூன்று மாதங்களாக எந்தப் பொருட்களும் வாங்காத ரேஷன் அட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தொடர்ந்து மூன்று மாதங்கள் எந்தவொரு ரேஷன் பொருட்களும் வாங்காமல் இருந்ததற்கு சரியான காரணம் அளிக்க வேண்டும்.

ஒருவேளை கணக்கெடுக்கும் பணியின் போது சம்பந்தப்பட்ட முகவரியில் ரேஷன் அட்டைதாரர் இல்லையெனில் உடனடியாக அந்த ரேஷன் அட்டை முடக்கப்படும். பின்னர் எந்தவொரு பொருளும் வாங்க முடியாது. டெல்லியில் பல்வேறு மாநிலத்தவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருவதால் ரேஷன் அட்டைகள் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

பயன்படுத்தாத அட்டைகள் (Unused cards)

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகால கொரோனா நெருக்கடி புலம்பெயர் தொழிலாளர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இதனால் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும் டெல்லிக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஏராளமான ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.

3 மாதம்- முடக்கம் (3 month- freeze)

இதேபோல் தமிழகத்திலும் ரேஷன் அட்டைகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து, 3 மாதங்கள் பொருட்கள் வாங்காமல் இருக்கும் அட்டைகள் முடக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்போதைக்குத் தேர்தல் இல்லை -அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்- அந்த வழக்கில் சிக்கினால்!

English Summary: These ration cards will be disabled soon! Published on: 06 October 2021, 01:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.