திருப்பரங்குன்றம் தாலுகா விவசாயிகள் கோடை உழவிற்கு (Summer farming) தயாராகி வருகின்றனர். கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் விவசாயம் ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். சிற்றூர்களில் கிணற்றுப் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும்.
கோடை உழவு
இந்தாண்டு பருவமழை மற்றும் வைகை அணை நீரால் தாலுகாவிலுள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பின. சமீபத்தில் முதல் போக நெல் அறுவடை (Paddy Harvest) செய்யப்பட்டது. மானாவாரி கண்மாய் பகுதிகளில் கிணறு, ஆழ்குழாய்களில் நீர் இருப்பவர்கள் மட்டும் நெல் பயிரிட்டு, தற்போது காய்கறி பயிரிட்டுள்ளனர். கண்மாய்களில் நீர் இருப்பதால் கோடையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். தற்போது விவசாயிகள், கோடை உழவு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். சில நாட்களாக பெய்யும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மழை நின்றதும் கோடை உழவு துவங்குவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
கோடை மழை நீரும் மண்ணில் சேமிக்கப்படும். இதனால் மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும். கோடை உழவினால் மண்ணின் மேல்பகுதியில் உருவாகும் புழுதி படலம் பங்குனி, சித்திரை மாத கோடை வெயில் வெப்பம் பூமிக்குள் செல்லாமல் தடுக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி!
கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!
Share your comments