தமிழகத்தில் கொரோனா நிவாணை நிதி பெறாத அட்டைதாரர்கள் வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
ரூ.4,000 (Rs.4,000)
இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால், கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சி (DMK rule)
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்ற திமுக, முதற்கட்டமாகத் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது.
2 தவணை (2 Installments)
ஊரடங்கு காலத்தில் 2 தவணைகளாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.தமிழகம் முழவதும் உள்ள நியாவிலைக்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை பெற்றுக்கொண்டனர்.
31ம் தேதி வரை (Until the 31st)
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் இதுவரை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் (From August)
இதில் ஜூலை 31-க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1முதல் நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகுப்பு (Relief package)
தற்போது வரை 99 சதவீதத்துக்கு மேலாக அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய நிவாரண மளிகை பொருட்களை பெற்றுக்கெண்டதாக தமிழக அரசு, அறிவித்துள்ளது.
புதிய அட்டைகளுக்கு (For new cards)
அதேநேரத்தில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஒலிம்பிக்கில் கொரோனா பரவ வாய்ப்பு: WHO எச்சரிக்கை!
குளிர்காலத்தில் கொரனாவின் புதிய ரகம்: பிரஞ்சு விஞ்ஞானி தகவல்
மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்!
Share your comments