திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு வந்து சேரும் இடத்திலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால், காவிரி கரையோர வாய்க்கால் ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் முதலைக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. எதற்காக இப்படி ஒரு கோவில் கட்டப்பட்டது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நீர் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் முதலைகள் அதிகம் வசித்து வந்தன. காவிரிக் கரையிலிருந்து நிலப்பகுதிக்கு வந்த முதலைகள் உணவின்றியும், வாழ்வதற்கு உகந்த சூழல் இன்றியும் முதலைகள் இறந்துள்ளன.மேலும், மீன் வலையில் மாட்டும் சிறுசிறு முதலைகளை பிடித்து வேறொரு இடத்துக்கு சென்று வளர்த்தும் வந்துள்ளனர். அப்போது, முதலைகள் உணவு உண்ணுவதை தவிர்த்துள்ளன. முதலைகள் இறந்ததோடு, கிராமத்தினரும் துன்பங்களை சந்தித்துள்ளனர். இதனால், பிடிபடும் முதலைகளை மீண்டும் வாத்தலை காவிரி ஆற்றிலேயே விட்டுள்ளனர்.
முதலை சிலை:
முதலைக்கும், கிராமத்தினருக்கு ஏற்பட்ட துன்பங்களை போக்க வாத்தலை காத்தவராய சுவாமிக்கு விரதமிருந்து பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். முதலைகளை யாரும் துன்புறுத்தக்கூடாது. அவைகள் பாதுகாப்போடு வசிக்க வேண்டும் என அப்பகுதியினர் முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக, இந்த இடத்தில் வலையிட்டு மீன் பிடிப்பதை தவிர்த்தனர். சிலர் வலையில் மாட்டிய முத லை குஞ்சுகளை மீண்டும் ஆற்றிலேயே விட்டனர்.
கரை ஒதுங்கும் முதலைகளின் துன்பத்தை போக்குவதற்கு முதலைகளுக்கு உணவிடவும் தொடங்கினர். முதலைகள் உணவு உண்பதை விட கிராமத்தினர் ஊற்றும் பாலை விரும்பி குடித்து வந்துள்ளன. மேலும், கிராமத்தினரையும் முதலைகள் எதுவும் செய்யாமல் இருந்துள்ளன. முதலையை பாதுகாத்திடும் வகையில் முதலைக்கு சிலை வைத்தும் கிராமத்தினர் வழிபடத் தொடங்கியுள்ளனர்.
இதில், வாத்தலை காத்தவராய சுவாமிக்கு அட சல் பொங்கலிட்டு அபிஷேக ஆராதனையுடன் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கழுவேற்று விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்று திரளான கிராமத்தினர் முதலை பாருக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வாத்தலை வந்து முதலை சிலைக்கு பாலூற்றி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் வேண்டியவை நிறைவேறுகிறது என கிராமத்தினரிடையே பரவலாக நம் பிக்கை எழுந்தது. நாளடைவில் இப் பகுதியில் முதலைகள் வசிப்பதும். கரைஒதுங்குவதும் குறைந்தன.
மேலும் படிக்க:
Share your comments