தீபாவளிக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று போனஸ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
நெருங்கும் தீபாவளி (Approaching Diwali)
பண்டிகைக்காலம் வந்தாலே செலவும் வரும், வருமானம் வரும். அந்தவகையில், |தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகியுள்ளன.
அகவிலைப்படி (Dearness Allowance)
ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது கூடுதலாக 3% அகவிலைப்படியை அதிகரித்து மொத்தம் 31 விழுக்காடாக உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
நிலுவைத் தொகை (Amount outstanding)
அகவிலைப்படி நிலுவைத் தொகையும் தீபாவளிக்குள் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி இன்னும் நிலுவையில் உள்ளது. இத்தொகையும் விரைவில் செலுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
PF வட்டித் தொகை (PF interest amount)
6 கோடிக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் வாங்குவோருக்கு தீபாவளிக்கு முன்பாகவே 2020-21ஆம் ஆண்டுக்கான PF வட்டித் தொகை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைவருக்கும் வட்டித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, PF வட்டித் தொகை என மூன்றும் ஒரே நேரத்தில் வந்தால், தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 3 போனஸ் கிடைக்கிறது என்றேக் கூறலாம்.
மேலும் படிக்க...
Share your comments