வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பரவலாக மழை (Rain)
சென்னையின் பல இடங்களில் இன்று பரவலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் அனைத்தும் தண்ணீர் மூழ்கியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்தும் தடைபட்டது.
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை முன் அறிவிப்பு(Weather forecast)
அடுத்து 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, சேலம் நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உன் மாவட்டங்களில் லேசான மழைய பெய்யக்கூடும்.
மேக மூட்டம் (Cloudy)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!
புயலைத் தாங்கும் மரம் பற்றித் தெரியுமா? அனைத்து தோல்வியாதிக்கும் அருமருந்தாகிறது!
Share your comments