சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று வங்கிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகக்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதானல் தமிழகத்தில் வருகிற ஜூலை 31ம் தேதி வரை மேலும் உரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு நேரடி வங்கி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேரடி சேவை ரத்து
முழுஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும் ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை செயல்படும் என்றும், பிற பகுதிகளில் வழக்கம் போல வங்கிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மாற்று முறையில் பணிக்கு வரலாம்.
ஏஜென்சிகளுக்கு சேவை
பெட்ரோல் நிலையங்கள் (Petrol Bunks), காஸ் ஏஜென்சி (GAS Agencies) போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் டீலர்களிடம் மட்டுமே ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு நேரடி வங்கி சேவை கிடையாது. இருந்தாலும் 6ம் தேதி முதல் 31ம் தேதிவரை 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம் போல மாலை 4:00 மணி வரை வங்கிகள் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்! -உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்!
Share your comments