வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைத்திட ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கையில், வேளாண் இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள நிகழாண்டு ரூ.1.94 கோடியும், 2 வாடகை மையங்கள் அமைக்க ரூ.
20 லட்சமும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில் முனைவோா் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், ஊராட்சி குழுக்கள் போன்றோா் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்க 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டு வருடங்களுக்கு பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை மீண்டும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கரும்பு சாகுபடி இயந்திர வாடகை மையம்
கரும்பு சாகுபடிக்கு பயன்படும் வேளாண் இயந்திரங்கள் மையம் அமைக்க ரூ.1.5 கோடி மதிப்பிற்கு 40 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை) மானிய உதவி வழங்கப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற முதலில் உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்ய வேண்டும். பின்னா் விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான 'www.agrimachinery.nic.in"- ல் இணைக்கப்படும்.
இவ்வாண்டிற்கென விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்க இயலும்.
அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும்.ஆய்வுகள் அனைத்தும் முடிந்த 10 நாள்களுக்குள் விவசாயியின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்கு வருகிற 20ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை!!
ஓமியோபதி மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி!!
Share your comments