1. செய்திகள்

TN Agri Budget: விவசாயத்திற்கு தனி பட்ஜெட் 2022-23

T. Vigneshwaran
T. Vigneshwaran
TN agriculture budget 2022

கடந்த ஆண்டு தான், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

நிழல் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை என்ற பெயர்களில் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 15 ஆண்டுகளாக தனது பட்ஜெட் எதிர்பார்ப்புகளையும், ஆட்சியில் இருந்தால் தான் என்ன செய்திருப்போம் என்பதையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Also Read:4 லட்சத்திற்கும் குறைவான விலையில் இதோ மூன்று கார்! 

விவசாயத்திற்கு ஏதுவாக கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் வேளாண்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாதியின் பெயரில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துவது, சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவிப்பது என அரசு அறிவித்தது.

பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு விவசாயிகளை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு, அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி, உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை கள் என பல திட்டங்கள் வேளாண் பட்ஜெட் 2021-22இல் அறிவிக்கப்பட்டன.

சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 ஹார்ஸ் பவர் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும் என்றும் கடந்த ஆண்டு தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதியளித்திருந்தார்.

மேலும் படிக்க

தமிழக பட்ஜெட்: உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000

English Summary: TN Agri Budget: Separate Budget for Agriculture 2022-23 Published on: 19 March 2022, 07:53 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.