தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது, இதை முன்னிட்டு தமிழக அரசியில் கட்சிகள் தனது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது. இதில் பெறும்பாலான வாங்குறுதிகள் விவசாயிகளை மையப்படுத்தி அமைந்துள்ளது.
விவாசாயிகளை காப்பது அதிமுக மட்டுமே - முதல்வர் பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கஷ்டம் நீங்கி ஏற்றம் பெற பாடுபடும் அரசு அதிமுக, விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான். இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் என்று குறிப்பிட்டார்.
மேலும், விவசாயம் செழிக்க விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்.
விவசாயம் அரசு பணியாக்கப்படும் - சீமான் பிரச்சாரம்
இதேபோல், தேனி மாவட்ட்டம் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயத்தை அரசு வேலையாக அறிவித்து படித்த, படிக்காத இளைஞா்களுக்கு பணி வழங்கப்படும் என தெரிவித்தாா், மேலும் விவசாயத்தில் ஒருங்கிணைந்த கூட்டு பண்ணை அமைத்து சுய சார்பு தொழில் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
விவசாயத்திற்கு தனி நிதி ஆணையம் - ஜி.கே வாசன் அறிக்கை
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள தேர்தில் அறிக்கையில், விவசாயம் சார்ந்த அனைத்து மாவட்டத்திலும் ஒரு விவசாய கல்லூரி. விவசாய கடன் வழங்க தனி நிதி ஆணையம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்றத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Share your comments