1. செய்திகள்

விவசாயிகளின் வருமானம் மற்றும் நலன் பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்

KJ Staff
KJ Staff
Contract Base Farming

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்துக்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்குரிய தொகையும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்யும்.

ஒப்பந்த சாகுபடி திட்டத்தின் சிறப்பம்சம் 

இந்தியாவிலேயே முதன் முறையாக,  தமிழக அரசு குடியரசு தலைவரின்  ஒப்புதலுடன் 'ஒப்பந்த சாகுபடி திட்டத்தினை' அறிமும் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்படுவதுடன்,  அவர்களின் நலனும் பாதுகாக்கப் படும்.

தமிழக முதல்வர் 2018-2019-ம் ஆண்டிற்கான  நிதிநிலை அறிக்கையில், ‘ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க  உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்’ என சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். 

TN agriculture Farming

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள்  சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழ் நாட்டை பொறுத்தவரை மூலிகைப் பயிர்கள், இறைச்சிக் கோழி போன்றவை ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல ஆண்டுகளாக  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும் இவர்களின் உரிமை  மற்றும் பாதுகாப்பு  போன்றவற்றை இந்த  சட்டம் உறுதி செய்யும்.

இந்தச் சட்டத்தின்படி, விவசாய விளை பொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய் யப்பட்ட பொருட்களை, ஒப்பந்தம் அடிப்படையில் கொள்முதல் செய்பவர்  அல்லது வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அல்லது அதனை பதப்படுத்தும் நிறுவனங்கள், ஒப்பந்தம் செய்த அன்றே விலையினை  நிர்ணயம் செய்து கொள்ளும். இதன் மூலம் அறுவடைக்கு பின் ஏற்படும் விலை சரிவை தவிர்க்க இயலும்.

Warehouse

ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. சில நேரங்களில் அதிக விளைச்சல் காரணமாக, உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சி ஏற்படும். இது போன்ற சமயங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். இந்த சட்டத்தின் மூலம்  விவசாயிகளுக்கு எந்தவித பண இழப்பும் ஏற்படாமல், முன்னரே ஒப்பந்தம் அடிப்படையில்  விலை  உறுதி செய்யப் படுகிறது.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தில், கொள் முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும் பட்சத்தில் தோன்றும் இடர்பாடுகளைக் களைந்து, விளைபொருட்களுக்குரிய தொகையை பெற்றுத்தரும் வகையில் இச் சட்டம் செயல் படும். இச்சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு முதல்வர் வேளாண்  துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: TN becomes first State to introduce new law on contract base farming Published on: 30 October 2019, 02:34 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.