1. செய்திகள்

முழு ஊரடங்கு: வீதிகளில் உணவு கிடைக்காமல் தவிக்கும் கால்நடைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு - தமிழக அரசு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
credit : Maalaimalar

கொரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில்
தற்போது நிலவும் கொரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல் படும் நாய்கள், பூனைகள், குதிரைகள் போன்றவைகால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளின் துன்பத்தை தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் இதர விலங்கு நல அமைப்புகள், தனி நபர்கள் மூலம் சென்னை பெருநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது.

மேலும் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்கு தேவைப்படும் தீவனப் பொருட்களை கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.

முதற்கட்டமாக சுமார் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் அரிசி-1250 கிலோ, நாய் உலர் தீவனம்-220 கிலோ, 525 கிலோ குதிரைகளுக்கான தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் முதலானவை இன்று கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் அவர்களால் மேற்கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 15 நாட்களுக்கு 1000க்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க....

கொரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு

அளவுக்கு அதிகமாக நீராவி பிடித்தால் கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படும்! மருத்துவர் எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

English Summary: TN Govt made arrangements to provide food to street livestocks Published on: 30 May 2021, 09:59 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.