தமிழ் நாட்டில் புதுவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் தை பொங்கலை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் தயராகி வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களும் தயராகி வருகிறது.
முன்பே, பொங்கல் பண்டிகைக்காக, அரசு அறிவித்திருந்த 20 பொருட்களும் தயராகி வரும் நிலையில், தற்போது பொங்கல் பானைகளும் தயராகி வருகிறது. எனவே தமிழ்நாட்டின் காரைக்கால் மாவட்டத்தின் புதுவை பகுதியில் பொங்கல் பானை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பானைகளை செய்ய, புதுவை மக்கள் புதுச்சேரியிலிருந்து களிமண் எடுத்து வந்து, பானை செய்வது வழக்கமாகும். ஆனால் இம்முறை புதுவை மக்கள் பெரும் சிக்கலுக்கு பின் பானை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஏன்? இதற்கான காரணம் என்ன? விலை உயர்வா? அறிந்திடுங்கள்.
புதுச்சேரி அரசு களிமண் அள்ள தடை இருப்பதால், பானை செய்பவோரின் இயல்பு நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இருப்பினும், அவர்கள் பானை தயாரித்து வருகின்றனர். எனவே இம்முறை பானையின் விலை அதிகரிக்கலாம்.
மேலும் புதுவை மக்கள், புதுச்சேரி அரசு களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தடையினால் பானை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர், எனவே இம்முறை பானையின் விலை அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து, காரைக்காலில் தயாராகும் பானைகள் டெல்டா மாவட்டங்களில் விற்பனையாகும்.
பொங்கலின் சிறப்பே, வீட்டின் முன் மண் பானை வைத்து, அதை சுற்றி கரும்பு கட்டி, பச்சரிசி, பால் ஆகிய பொருட்கள் கொண்டு, பொங்கல் செய்வதாகும். இந்த பண்டிகையின் முக்கிய பொருட்களில் ஒன்று மண் பானையாகும், அதிலும் பெரும்பாலோர் விரும்புவது மண் பானையாகும்.
மேலும் படிக்க:
Share your comments