தொழில்முனைவோர்களை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிது. நெல்லிக்காயிலிருந்து பல்வேறு மதிபுக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பு பயிற்சியை நடத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் இணைந்து பயன்பெறலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 25.3.2021 மற்றும் 26.3.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
-
நெல்லி பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம்
-
நெல்லி ஜாம்
-
தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்
-
தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொளளுவதற்குரிய வழிமுறைகள்
ஆர்வமுள்ள விவசாயிகள், தனி நகர்கள், தன்னார்வளர்கள், தொழில்முனைவோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ரூ.1770 (ரூ.1500+ GST 18%)- பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுhhp மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003. தொலைபேசி எண் 0422-6611268 தொடர்பு கொண்டும் தகவல்களை கேட்டுப் பெறலாம்.
Share your comments